Burma Memoirs‎ > ‎

சென்னையில் "எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா

எஸ். நரசிம்மன்



சென்னை வங்கி ஒன்றின் மேலாளர் எஸ். நரசிம்மன் நூலை வெளியிட, 'மதுரை பிரஸ்' கே. முரளிதரன் நூலைப் பெற்றுக்கொண்டார். நடுவே தொகுப்பாசிரியர் மு இராமனாதன்

டிசம்பர் 31, 2009 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி வளாகத்தில், காலச்சுவடு அரங்கில் செ.முஹம்மது யூனுஸ் அவர்களின் "எனது பர்மா குறிப்புகள்" நூல் வெளியிடப்பட்டது.

ஹாங்காங் இந்தியர்களால் 'யூனூஸ் பாய்' என்று அன்போடு அழைக்கப்படும் யூனூஸ் அவர்கள், 43 ஆண்டுகளுக்கு முன்னால் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் 42 ஆண்டுகள் வாழ்ந்த, பிறந்து வளர்ந்த 'பர்மியத் திருநாட்'டைப் பற்றி இந்த நூலில் சொல்கிறார். இந்த நூல் பர்மீயத் தமிழர்களின் வாழ்வு, கலாச்சாராம், கலை, அரசியல், இலக்கியம் அனைத்தையும் தொட்டுச் செல்கிறது

புத்தகக் கண்காட்சி அன்றும் ஜனத்திரள் மிகுந்து காணப்பட்டது. இப்போதெல்லாம் எல்லா கண்காட்சிக்கும் வந்து சுற்ற நிறையப் பேர் இருக்கிறார்கள். என்றாலும், இங்கே ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகம் . நூல் விற்பனையும் அதிகம் என்கிறார்கள். காலச்சுவடு இதழும் அதன் பதிப்புகளும் மட்டுமல்ல, அப்பதிப்பகத்தின் நூல் வெளியீடும் வித்யாசமாகத்தான் இருக்கிறது. கண்காட்சி நடந்த டிசம்பர் 30, 2009 முதல் ஜனவரி 10, 2010 வரை, ஒவ்வொரு தினமும் ஒன்றோ இரண்டோ நூல்கள் வெளியிடப்பட்டன. இந்த வெளியீட்டு நிகழ்வுகள் காலச்சுவடு அரங்கிலேயே நடந்தன. விளம்பரங்கள் கிடையாது, விழா மேடை இல்லை, பொன்னாடையும், மாலை மரியாதையும் இல்லை, வார்த்தைப் பந்தல்கள் இல்லை.

Comments